Friday, 26 June 2020

இலங்கையில் குஜராத்தியர் || Gujaratis in Sri Lanka


1808 ஆம் ஆண்டளவில் குஜராத்தியர்கள் இலங்கை வந்துள்ளனர். 1905
இல் மோஹன்லால் மற்றும் நந்தலால் ஆகியோர் அரிசி வர்த்தகத்தில்
இருந்துள்ளனர். அதே போன்று பால் உற்பத்தித்துறை மற்றும் பால்
குஜராத்தியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பம்பாய் தலைமைச்
செயலகத்தின் ஒரு கிளையான Nation Dairy கம்பனி குஜராத்தியர்
களினால் கொழும்பில் நிர்வகிக்கப்பட்டது. இக்கம்பனி மூலம் பட்டர்
மற்றும் ஏனைய பால் உற்பத்திப் பொருட்களை விநியோகம் செய்து
வந்தனர். இதில் அங்கத்துவம் வகித்த பங்குதாரர்களில் PV. டல்வி
(P.V.Dalvi) இக் கம்பனியை நிர்வகித்து வந்துள்ளனர்.



Metropolitan நிறுவனம் அம்பானி சகோதரர்களால் நடாத்தப்பட்டு வருகிறது.



1922 ஆம் ஆண்டு உதேஷி என்பவர் வெள்ளவத்தை துணி ஆலையின்
டையிங் (கலர் பூச்சு) மாஸ்டராகப் பணியாற்றியுள்ளார்.
1930 இல் உதேசி தன்னுடைய சொந்த முயற்சியால் உயர்ந்து
'டெசிகேட்' என்ற ஒரு வகையான பூச்சு வகையினை ஜெர்மனிக்கு
ஏற்றுமதி செய்து அங்கிருந்து மாற்றீடாக பண்ட மாற்றம் முறையில்
வானொலிப் பெட்டிகளை இறக்குமதி செய்து இலங்கையில் சீடில்ஸ்'
நிறுவனத்துடன் இணைந்து முக்கிய பங்களிப்புச் செய்துள்ளார்.
பின்னாளில் இதே கம்பெனியினை விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
Siedles கம்பெனி இரண்டாம் உலக மகா யுத்த காலத்தின் பின்னர்
ஜப்பானிலிருந்து பல்வேறு வகையான மின் உபகரணங்களைத் தருவிப்பதில் முன்னணி வகித்து வருகின்றது.




கொழும்புப் பொரளையில் இயங்கிவரும் Siedles நிறுவனம் தற்போது Morarji Udeshi மற்றும் Gowshik Udeshi ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது.



இலங்கை மக்களின் வாழ்க்கை பொருளாதார நிலைமைகளுக்கு
ஏற்றதான வானொலிக் கருவிகளை விற்பனை செய்ததன் மூலம் மக்கள்
மத்தியில் இக்கம்பனி மிகவும் வரவேற்பினைப் பெற்றிருந்தது.
வாஹினி எனும் ரேடியோ அப்போது நூறு ரூபாவிற்கும் குறைந்த
விலையிலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜாமின்தாஸ் அம்பாணி
ஒரு கணக்காளராவர். இவர் 1934 இல் இலங்கை வந்துள்ளார். 1958 ஆம்
ஆண்டு மெட்ரோபொலிடன் கம்பெனியினை ஆரம்பித்துள்ளார். அரச
மற்றும் தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான காரியாலய உபகரணங்
களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் இவரது கம்பெனி
அங்கமாகும்.
குஜராத்தி மக்கள் கிருஷ்ண பகவானை வழிபடுகிறார்கள். இவர்களது
தாய் மொழி குஜராத்தி, கொழும்பு கொட்டாஞ்சேனையில் ராதா
கிருஷ்ணா கோவில் உள்ளது. 1940 இல் கட்டப்பட்டுள்ள இந்த குஜராத்தியர்கள் அதிகமாகக் கூடி விழா எடுப்பது வழக்கம். ஆரம்பக்கால
குஜராத்தியர்கள் இலங்கைக்கு வந்தபோது போரா' இனத்தவரின்
வர்த்தக உதவியாக கணக்காளர்களாகவும், மேலாளர்களாவுமே வந்துள்ளனர். போரா, குஜராத்தி ஆகிய இரு சமூகத்தவர்களதும் பூர்வீக மண்
ஒன்றாகும். எனவே இந்த இரு சமூகத்தவர்களும் ஒரே காலகட்டத்தில்
இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இலங்கையில் குஜராத்தியினர் சனத்தொகை 500க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளது.



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home