Tuesday 30 June 2020

இலங்கையை ஆளும் பர்ஸி இன மக்கள் || Parsis in Sri Lanka




1803 இல் முதலாவது பர்சி இனத்தவர் இலங்கை வந்துள்ளார். அவரின்
முழுப் பெயர் Hormusjee Aspandiarjee Khambata. அவரது மூன்று கப்பல்கள்
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்
பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. உலகெங்கிலும் சுமார் இரண்டு
இலட்சம் பர்சி இனத்தவரே உள்ளனர். இதில் அதிகமானோர் இந்தியா
வில் உள்ளனர். இலங்கையில் தற்போது சுமார் 100 பேர் மட்டுமே
உள்ளனர்.

பர்சி இனத்தவர் இந்தியாவிலிருந்து இலங்கை வந்துள்ள போதிலும்
இவர்களது ஆரம்ப காலப் பூர்வீகம் ஈரான் ஆகும். பர்சியன் கடல்
கரையோடு இவர்களது பர்சியன் நாகரிகம் தொடங்குகிறது. ஒரு காலத்தில்
பர்சிய மன்னர் எகிப்திலிருந்து இந்துஸ்நதி வழியாக கிரீஸ் வரை ஆட்சி
புரிந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. கி.பி. 700 இல் பர்சியா ஈரானியர்களால்
முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்குள்ள
அதிக எண்ணிக்கையானோர் முஸ்லிம்களாக மாறியுள்ளனர். அக்கால
கட்டத்தில் எஞ்சியவர்கள் தங்களது சம்பிரதாயங்கள், மதம், மொழி
என்பவற்றைக் காப்பாற்றிக் கொண்டு வாழக் கூடிய இடம் தேடி
இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் கரைசேர்ந்த இடம் இந்தியாவின்
மேற்குக் கரையோர மும்பாய் நகரமாகும். அங்கு அவர்கள் நிரந்தரமாகத்
தங்கிவிட்டனர்.


ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை வாழ் பார்சி மக்கள் 


பர்சியாவிலிருந்து அரசியல் தஞ்சம் கோரி வந்தவர்கள் குஜராத்தின்
'சூரத்'நகரைச் சென்றடைந்துள்ளனர். இந்திய - ஐரோப்பிய வர்த்தகர்
களுக்குத் துணைபுரிகின்ற பணியில் ஈடுபட்டு இரு பிரிவினரதும்
நன்மதிப்பைப் பெற்றுள்ளார்கள். மும்பாய் கிரமமாக வர்த்தகத்தில்
முன்னேற்றம் கண்டதில் பர்சியக்காரர்கள் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளனர். வர்த்தகம், கைத்தொழில், சட்டத்துறை, வைத்தியத்துறை, போன்ற
வற்றில் பர்சியர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள். டாட்டா நிறுவனம் இரு
பர்சி சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனமாகும். இன்றும் இந்த
டாட்டா குடும்பம் பர்சியினரைச் சார்ந்துள்ளது.




பர்ஸி மக்களின் பூர்விக நிலங்கள் 



இலங்கையில் 1603 காலப்பகுதியில் காலி துறைமுகப் பகுதியில்
பர்சியர்கள் வாழ்ந்தமைக்கு அடையாளமாக அங்கே அவர்களது
கல்லறைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எவ்வாறெனினும் 19 ஆம்
நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த போரா, குஜராத்தி, மேமன், சிந்தி,
கோஜா போன்ற சமூகத்தவரின் வருகையுடனேயே பர்சியினரின்
வருகையும் இடம்பெற்றுள்ளதென்பதே சான்றாக உள்ளது.
இலங்கையில் முதலாவது இந்திய சில்லறைச் சாமான்கள் விற்கும்
கடை பரிசியரினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 'டெடி ஹிர்றி' என்பது இதன் பெயராகும். கொழும்பு, புறக் கோட்டை, கொட்டாஞ்சேனை
போன்ற இடங்களில் இவர்களது வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளன.
அரிசி, சீனி, பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தி
யாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளனர். அதே
போன்று லண்டன் உட்பட ஜரோப்பிய நகரங்களுக்கு வாசனைத் திரவியங்களையும் ஏற்றுமதி செய்துள்ளனர்.



பர்ஸிக் குடும்பம் ஒன்று 
(இலங்கை)


1839 இல் இலங்கை வர்த்தக சபை ஆரம்பிக்கப்பட்ட போது
ஆங்கிலேய வர்த்தக உறுப்பினர்களுக்கு மேலதிகமாக இருந்த ஆங்கிலேயர்
அல்லாத உறுப்பினர்கள் இருவருமே பர்சிக்காரர்களாவார். முதலாவதாக
இலங்கைக்கு வந்த கம்பாரா என்பவரும் சாபூர்ஜி ஹிர்ஜி ஆகிய
இருவருமே அங்கத்தவர்களாக இருந்துள்ளனர். வெள்ளவத்தை துணி
ஆலையின் உரிமையாளர் ஈ.எஸ். கெப்டன் என்பவரும் பர்சி இனத்தவரே.
லெஸ்லி கெப்டன் என்பவர் இன்றும் இலங்கையில் மிகவும் பிரசித்தி
பெற்ற தொழில் அதிபராக இருக்கின்றார்.
அபான்ஸ் நிறுவனம் பர்சி சமூகத்தினைச் சார்ந்த திருமதி அகான்
பெஸ்தோன்ஜி என்பவருக்குச் சொந்தமானதாகும். கொழும்பு கண்
ஆஸ்பத்திரியில் முதலாவது விசேட நிபுணராக இருந்த டாக்டர் ஜே.
டடாபோய் பர்சி இனத்தவரே. அதே போன்று கண்டிதர்மராஜ கல்லூரியில்
பில் மொரியா என்பவர் அதிபராகவும் இருந்துள்ளார்.

மஹாகமவில் அமைந்துள்ள புற்று நோய் வைத்தியசாலை பர்சி
இனத்தவரின் கொடையாகும். இலங்கையில் சிரேஷ்ட சட்டத்தரணியும்
ஐ.தே.க. அரசில் அமைச்சராகவும் இருந்த கே. என். சொக்ஷி பர்சி
சமூகத்தைச் சார்ந்தவராவார். இவரது தந்தை என்.கே. சொக்ஷி
இலங்கையில் சட்டத்துறையில் மிகவும் புகழ்பெற்று விளங்கியுள்ளார்.
கே.என். சொக்ஷி ஜனாதிபதி ஆர். பிரேமதாஸாவின் மிக நெருங்கிய
நண்பராக விளங்கியுள்ளார். 1989 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறைக்கமைய தேசியப் பட்டியல் நியமனங்களை
வழங்கும் போது பல்லின சமூகத்தவரினதும் பிரதிநிதித்துவத்துக்காக
இன, சாதி, அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள்..

ஜனாதிபதி சட்டத்தாணியான கே.எஸ். சொக்ஷி பிரசித்தி பெற்ற பல்வேறு
வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்ற நற்பெயரை உடையவர்.
டி.பி.விஜயதுங்கவின் அரசாங்கத்தில் சட்ட நீதி அமைச்சராகவும் ரணில்
விக்கிரமசிங்கவின் அரசில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தவர்.


இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சரான K.S.சோக்ஷீ 


பர்ஸி இனத்தவர் அக்னி தேவனை வழி படுகிறார்கள். 'சாதூஸ்ரா
என்றும் சொரோஸ்திரியன் அல்லது மஸ்தா என்றும் இவர்களது மதத்தைக்
குறிப்பிடுகிறார்கள். கட்டுப்பாடுகள் குறைந்த விதிமுறையினைக்
கடைப்பிடிக்கிறார்கள். இவர்களது மதம் தொடர்பான நூல் Zendavesta
என்று அழைக்கப்படுகிறது.
பிராமண குலத்து இந்துக்கள் பூணூல் அணிவது போல் பர்சி இனத்து
ஆண், பெண் இரு பாலாரும் 12 வயது பூர்த்தியானதன் பின்னர் இடுப்பில்
'சில்க் பட்டு நூல் அணிவது வழக்கமாகும். பர்சியர்கள் பர்சியாவிலிருந்து
இந்தியா வரும் போது கொண்டு வரப்பட்ட ஒரு தீபம் இன்று வரை
மும்பாயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயத்தில் (கி.பி. 700) லிருந்து
அணையா விளக்காக எரிந்து கொண்டு உள்ளது.

பர்ஸிய மதம் 


உணவுக் கட்டுப்பாடு
இல்லாதபோதிலும் இவர்கள் மாட்டிறைச்சி, பன்றியிறைச்சியினை
உண்பதில்லை, காரம், எண்ணெய் குறைவாகவும் காய்கறி, பழ வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது இவர்களது வழக்கமாகும். பர்சி இனத்தவர்
இறந்து போனால் சடலம் கழுகுகளின் தீனாகப் போடப்படும். இந்தப்
பழக்கம் இப்போதும் மும்பாயில் வழக்கத்தில் உள்ளது. இறந்தவரின்
உடல் மீது ஒருவகைத் திரவத்தை பூசி எடுத்துச் சென்று அவர்களுக்கென
ஒதுக்கப்பட்டிருக்கின்ற மயானத்தில் வெட்ட வெளியில் வைத்து
விடுவார்கள், அவை பறவைகளுக்கு இரையாவது நற்செயலாகக்
கருதப்படுகிறது.
இலங்கையிலும் புளுமெண்டல் பகுதியில் இவ்வாறான Tower of
Silence என்ற ஒருவகை மேடை இதற்கென அமைக்கப்பட்டு இருந்துள்ளது.
பிற்காலத்தில் இது கூம்பிகேலே என்ற காட்டுப் பகுதிக்கு மாற்றப்
பட்டுள்ளது. ஆனால் இப்போது இலங்கையில் உள்ள குறைந்த
எண்ணிக்கையான மக்கள் மத்தியில் இந்தப் பழக்கம் நடைமுறையில்
இல்லை. தற்போது இங்கு இறக்கின்றவர்களை வெள்ளைத் துணியால்
சுற்றி கொழும்பு ஜாவத்தையில் உள்ள மயானத்தில் புதைத்து விடுகிறார்கள்.


இலக்கை வாழ் பர்ஸி மதகுரு மற்றும் இரு சகோதரர்கள் 


வேறு இனத்தவர்கள், சமயத்தவர் போல் மதம் மாறுவதால்
ஒருவர் பர்சி இனத்தில் இணைந்து விட முடியாது. கட்டாயமாக அம்மா,
அப்பா வழியில் வருபவர்கள் மட்டுமே பர்சி இனத்தவராக அங்கீகரிக்
கப்படுவர். இந்த இனம் பெருகாமல் இருப்பதற்கும் அருகி வருவதற்கும்
இதுவே பிரதான காரணியாகும். இந்தியப் பிரதமர் நேருவின் மகள்
இந்திரா காந்தி 1936 இல் திருமணம் செய்து கொண்டது பர்சிக்காரரான
பெரோஸ் காந்தி என்பரை. அதனாலேயே நேரு குடும்பம் இந்திரா
காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி வரை காந்தி
பரம்பரையான பெயரினைக் கொண்டு விளங்குகின்றார்கள்
குறிப்பிடத்தக்கது.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home