சீனாவில் தமிழ்க் கல்வெட்டு || Tamil Stone Inscription in China
2019 ம் ஆண்டில் , சீனாவின் தென்கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள பண்டைய துறைமுக நகரமான Quan Zhou நகரில் நடந்த அகழ்வுப் பணியின்போது , கி. பி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மற்றும் சீனா மொழிகளிலாலான கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டானது தமிழகம் மற்றும் சீனா தேசங்களுக்கு இடையிலான கலாசார ரீதியில் நீடித்த உறவினை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைகிறது.
சீனாவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் மற்றும் சீனா மொழிகளிலாலான கல்வெட்டின் எழுத்துப் பிரதி
இந்தக் கல்வெட்டானது , கி.பி 13ம் நூற்றாண்டில் சீனாவில் வாழ்ந்த சித்தரால் எழுதப்பட்டது. இந்தக் கல்வெட்டில் , சீனாவில் இருந்த ஒரு சிவன் ஆலயத்தைப் பற்றிய குறிப்புகள் தமிழ் மற்றும் சீனா மொழிகளில் காணப்படுகின்றன. தமிழ்த் தொல்லியல் ஆராய்ச்சியாளரான நாராயணமூர்த்தி என்பரது கருத்துப்படி , "ஆசிரியப்பா " எனும் அரிய தமிழ் வடிவத்திலேயே இதன் இலக்கிய வடிவம் அமைந்துள்ளது. இதே மாதிரியான கவி வடிவங்கள் , தமிழ்நாட்டின் பழனிப் பிரதேசத்தில் செப்பேடுகளிலும் ஓலைச் சுவடிகளிலும் காணப்படுவதை அவதானிக்கலாம். மேலும் மத்திய காலகட்டத்தில் சைவச் சித்தர்கள் மூலம் சைவ மதம் சிறப்பாகப் பரப்பப்படத்தையும் இந்தக் கல்வெட்டு உணர்த்தி நிற்கிறது.
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு
வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி மொங்கோலியப் பேரரசனாக செங்கிஸ்கான் மன்னனின் பேரனான குப்லை கான் ( Gublai Khan ) மன்னனின் காலத்தில் , " சம்பந்தப் பெருமாள் " என்னும் சித்தர் அங்கு வாழ்ந்தாகக் கூறப்படுகிறது.
இந்தச் சித்தர் , மன்னன் நோய்வாய்ப்பட்டிருந்த வேளையில் , அங்கு ஒரு சிவன் கோவிலைக் கட்டி , அதற்கு "திருக்காணிச்சுரம்" எனப் பெயரிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தக் கல்வெட்டானது கி.பி 1281ம் ஆண்டிற்கு உரியதாகக் கருதப்படுகிறது.
இந்தக் கல்வெட்டானது சேர , சோழ , பாண்டிய மன்னர்களுக்கும் சீனா நாட்டுக்கும் இடையிலான கடல் கடந்த தொடர்பினை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைகிறது.
தமிழ் எமது அடையாளம் !!
சாத்தியாய்ப் பிரிவது நமக்கு அவமானம் !!
--------------------------------------------------------------------
Advertisements
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home