Friday, 3 July 2020

சைவத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்திய ஈழத்து சித்தரான யோகர் சுவாமிகள்

ஈழத்துச் சித்தர் பரம்பரையின் மூலகுருவானவர் கடையிற்சுவாமிகள் (1804-1891), இந்தியாவின் பெங்களூர் நகரில் நீதிபதியாக இருந்த அவர் அப் பதவியினை துறந்து ஈழத்துக்கு வந்து யாழ்ப்பாணம் பெரிய கடை வீதிகளில் சித்துக்கள் புரிந்து அடியவரை ஆட்க்கொண்டார்.

கடையிற்சுவாமிகளின் அருட்கடாட்ச்சம் பெற்றவர் செல்லப்பாசுவாமிகள் (1840-1915), நல்லூர்த் தேரடியில் தவ வாழ்வு வாழ்ந்த செல்லப்பாசுவாமிகள் “ஒரு பொல்லாப்பும் இல்லை. எப்பவோ முடிந்த காரியம். நாம் அறியோம். முழுதும் உண்மை” எனும் நான்கு மகா வாக்கியங்களை அருளினார்.

செல்லப்பாசுவாமிகளின் பேரருள் பெற்றவர் மாமுனிவர் சிவ யோகசுவாமிகள் (1872-1964), கொழும்புத்துறை ஆச்சிரமத்தில் வாழ்ந்து, நற்சிந்தனை எனும் நல்லமுதம் அருளி, அடியவரை ஆற்றுப் படுத்தி, சைவ சமயம் உலகெங்கும் பரவ வித்திட்டவர் எங்கள் குருநாதன்.

யாழ்ப்பாணத்து மாமுனிவர் சிவ யோகசுவாமிகளின் கொழும்புத்துறை ஆச்சிரமத்துக்கு 1949 ஆம் ஆண்டு வைகாசிப் பெளர்ணமி (வைகாசி விசாகம்) தினத்தன்று ஓர் அமெரிக்க இளைஞர் வந்தார். அவரின் வருகையை எதிர்பார்த்திருந்த யோகசுவாமிகள் அவருக்கு “சுப்பிரமுனிய” எனும் நாம தீட்சை அளித்தார். அவரே எமது குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் (1927-2001), யோகசுவாமிகள் குருதேவருக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து அவரின் வாழ்வின் பணிகள் பற்றிய அறிவுரைகளையும் வழங்கினார்.

 யோகசுவாமிகள் குருதேவரின் முதுகில் ஓங்கிப் பலமாக அடித்து “இது அமெரிக்காவில் கேட்கும் இனி உலகெங்கும் சென்று சிங்கம் போல் கர்ச்சிப்பாய். நீ பல ஆலயங்களை அமைத்துப் பலருக்கு உணவளிப்பாய்” என ஆசி வழங்கினார். இந்த அடி குருதேவரை நாதசித்தர் மரபில் சேர்க்கும் தீட்சையாக அமைந்தது.

குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் மேலைத் தேசத்தில் முதலாவது சைவ கோயிலை ஶ்தாபித்ததோடு, ஹாவாய் சைவ ஆதீனத்தை நிறுவி, ஓர் துறவிகள் மரபினையும் உருவாக்கினார்.  உலகெங்கும் பல சைவ ஆலயங்கள் உருவாகுவதற்கும், பல அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் சைவ சமயத்தைத் தழுவுவதற்க்கு மூல காரணமாக விளங்குபவர் எனது குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் .

குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் சமாதியடையும் வேளையில் தனது துறவுச் சீடர்களில் முதன்மைச் சீடராகிய வேலன்சுவாமிகளை ஹாவாய் சைவ ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சன்னிதானமாக நியமித்து ஆசி வழங்கினார்.

சற்குரு போதிநாத வேலன்சுவாமிகள் (1942-) குருதேவரின் அருளாணைப்படி ஆதீன துறவியரையும், உலகெங்கும் பரந்து வாழும் அடியவர்களையும் ஆன்மீக வாழ்வில் ஆற்றுப்படுத்தி வருகிறார்.

“குருதேவர் திருவடிகள் வாழ்க”

Happy Guru Purnima. குரு பரம்பரையை போற்றுவோம்.

ஈழத்துச் சித்தர் பரம்பரையின் மூலகுருவானவர் கடையிற்சுவாமிகள் (1804-1891), இந்தியாவின் பெங்களூர் நகரில் நீதிபதியாக இருந்த அவர் அப் பதவியினை துறந்து ஈழத்துக்கு வந்து யாழ்ப்பாணம் பெரிய கடை வீதிகளில் சித்துக்கள் புரிந்து அடியவரை ஆட்க்கொண்டார்.

கடையிற்சுவாமிகளின் அருட்கடாட்ச்சம் பெற்றவர் செல்லப்பாசுவாமிகள் (1840-1915), நல்லூர்த் தேரடியில் தவ வாழ்வு வாழ்ந்த செல்லப்பாசுவாமிகள் “ஒரு பொல்லாப்பும் இல்லை. எப்பவோ முடிந்த காரியம். நாம் அறியோம். முழுதும் உண்மை” எனும் நான்கு மகா வாக்கியங்களை அருளினார்.

செல்லப்பாசுவாமிகளின் பேரருள் பெற்றவர் மாமுனிவர் சிவ யோகசுவாமிகள் (1872-1964), கொழும்புத்துறை ஆச்சிரமத்தில் வாழ்ந்து, நற்சிந்தனை எனும் நல்லமுதம் அருளி, அடியவரை ஆற்றுப் படுத்தி, சைவ சமயம் உலகெங்கும் பரவ வித்திட்டவர் எங்கள் குருநாதன்.

யாழ்ப்பாணத்து மாமுனிவர் சிவ யோகசுவாமிகளின் கொழும்புத்துறை ஆச்சிரமத்துக்கு 1949 ஆம் ஆண்டு வைகாசிப் பெளர்ணமி (வைகாசி விசாகம்) தினத்தன்று ஓர் அமெரிக்க இளைஞர் வந்தார். அவரின் வருகையை எதிர்பார்த்திருந்த யோகசுவாமிகள் அவருக்கு “சுப்பிரமுனிய” எனும் நாம தீட்சை அளித்தார். அவரே எமது குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் (1927-2001), யோகசுவாமிகள் குருதேவருக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து அவரின் வாழ்வின் பணிகள் பற்றிய அறிவுரைகளையும் வழங்கினார்.

 யோகசுவாமிகள் குருதேவரின் முதுகில் ஓங்கிப் பலமாக அடித்து “இது அமெரிக்காவில் கேட்கும் இனி உலகெங்கும் சென்று சிங்கம் போல் கர்ச்சிப்பாய். நீ பல ஆலயங்களை அமைத்துப் பலருக்கு உணவளிப்பாய்” என ஆசி வழங்கினார். இந்த அடி குருதேவரை நாதசித்தர் மரபில் சேர்க்கும் தீட்சையாக அமைந்தது.

குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் மேலைத் தேசத்தில் முதலாவது சைவ கோயிலை தாபித்ததோடு, ஹாவாய் சைவ ஆதீனத்தை நிறுவி, ஓர் துறவிகள் மரபினையும் உருவாக்கினார்.  உலகெங்கும் பல சைவ ஆலயங்கள் உருவாகுவதற்கும், பல அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் சைவ சமயத்தைத் தழுவுவதற்க்கு மூல காரணமாக விளங்குபவர் எனது குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் .

குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் சமாதியடையும் வேளையில் தனது துறவுச் சீடர்களில் முதன்மைச் சீடராகிய வேலன்சுவாமிகளை ஹாவாய் சைவ ஆதீனத்தின் இரண்டாவது குருமகா சன்னிதானமாக நியமித்து ஆசி வழங்கினார்.

சற்குரு போதிநாத வேலன்சுவாமிகள் (1942-) குருதேவரின் அருளாணைப்படி ஆதீன துறவியரையும், உலகெங்கும் பரந்து வாழும் அடியவர்களையும் ஆன்மீக வாழ்வில் ஆற்றுப்படுத்தி வருகிறார்.

“குருதேவர் திருவடிகள் வாழ்க”

“ஊரிலிருந்த என்னை உலகறியச் செய்து, ரிஷி தொண்டுநாதன் எனும் நாம தீட்ஷை தந்து, தொண்டு செய்யும் தவ வாழ்வு அருளிய என் குருதேவரின் திருவடிகளுக்கு என்றும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்” ~ அன்புடன் தொண்டுநாதன்

நன்றி  : சுவாமி  தொண்டுநாதன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home