எகிப்து மற்றும் ஓமான் நாட்டில் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள் || Tamil Brahmi Inscriptions in Egypt and Oman
உலகின் ஆதி மொழிகளில் இன்றும் நிலையாக நிலைத்திருப்பது தமிழ் மொழியே ஆகும். ஆரம்பக்காலத் தமிழர்களின் எழுத்து வடிவங்களின் ஆரம்பமானது , தமிழி எனப்படும் தமிழ்ப் பிராமி வடிவிலேயே தோற்றம் பெற்றது.இது இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அதிகமாகப் பரவியிருந்துள்ளது. இருப்பினும் ஆபிரிக்க மற்றும் அரேபியத் தீபகற்பத்தில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் பற்றிய ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படாமல் உள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
பாரத நாட்டிலே முதன்முதலில் பாரிய கடற்படையினைத் ஆரம்பித்த தமிழர்கள் உலகம் பூராகவும் கடல் வழியாகப் பயணித்தமைக்குப் பல சான்றுகள் உள்ளன.
தமிழ்ப் பிராமி எழுத்து வடிவம்
எகிப்தில் தமிழ்ப் பிராமி
இன்றைய எகிப்து நாட்டின் செங்கடற் கரையோரப் பிரதேசமான Quseir - Al - Qadim என்னும் இடத்தில் நடந்த அகழ்வின் போது தமிழ்ப் பிராமி பொறிக்கப்பட்ட மட்பாண்டத்தின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன.இந்த நகரமானது உரோமப் பேரரசின் கீழ் அமையப்பெற்ற துறைமுக நகரக் குடியேற்றமாக இருந்துள்ளது.இந்த மட்பாண்டமானது கி.மு 2ம் நூற்றாண்டுகள் பழமையானதாகக் காணப்படுகின்றது.
எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட மட்பாண்டத்தின் சிதைவு
கண்டெடுக்கப்பட்ட இந்த மட்பாண்டத்தின் சிதைவுகள் , எகிப்து மற்றும் தமிழர்களுக்கு இடையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட வர்த்தகத் தொடர்பினை எடுத்துக் கூறி நிற்கின்றது. இதே போன்ற சிதைவுகள் பல இதே பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டன.1995ம் ஆண்டு நடந்த ஆய்விலும் இரு புறங்களிலும் பிராமி பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன.30 வருடங்களுக்கு முன்னர், Berenike என்னும் இடத்தில் நடந்த அகழ்வுப் பணிகளிலும் கி. பி 1ம் நூற்றாண்டுக்குரிய தமிழ்ப் பிராமி பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளின் படிவுகள் கண்டெடுக்கப்பட்டன.
ஓமனில் தமிழ்ப் பிராமி
மேற்கணப்படும் தமிழ்ப் பிராமி எழுத்தானது, 2006ம் ஆண்டு ஓமனில் நடந்த அகழ்வுப் பணியின்போது கண்டெடுக்கப்பட்டது.இதன் காலப்பகுதியானது கி.மு 1ம் நூற்றாண்டு என கணிப்பிடப்பட்டுள்ளது.சங்க காலத்துப் புலவர்கள் பலரும் தமிழ் மன்னர்கள் எகிப்து மற்றும் உரோமப் பேரரசுடன் நடாத்திய பூக்கள் ஏற்றுமதி பற்றி பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.மத்திய காலச் சோழர்கள் மட்டுமின்றி ஆதிப் பாண்டியர்களும் தமது கடற்படையினை சிறப்பாக மேற்கொண்டனர் என்பதற்கு இது முக்கிய சான்றாக அமைகின்றது.
தமிழ் எமது அடையாளம் !!
சாதியாய்ப் பிரிவது நமக்கு அவமானம் !!
--------------------------------------------------------------------
Advertisement
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home