பிலிப்பைன்ஸ் நாட்டில் சோழர் ஆட்சி || Cholas in Philippines
மத்திய கால சோழர் ஆட்சியின் போது தமிழரின் அரசியல் , பொருளாதாரம் மற்றும் கடற்பலம் போன்றன அதி உன்னத நிலையினை அடைந்திருந்ததை நாம் அறிவோம். குறிப்பாக இந்தியாவின் ஐந்தில் மூன்று பகுதி நிலப்பரப்பு , கங்கைநதிப் பிராந்தியம், இலங்கை, மாலைதீவு,இந்தோனேசியாத் தீவுகள், மலேசியாத் தீபகற்பங்கள் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளையும் இந்தச் சோழப் பேரரசு தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்ததை நாம் அறிவோம். கி.பி 1000ம் ஆண்டுப் பகுதியில் உலகின் மிகபெரிய பேரரசாக சோழப்பேரரசே விளங்கியது. ராஜராஜசோழனால் உன்னதமடைந்த சோழப்பேரரசு , பின்னர் ராஜேந்திரசோழனால் கடல் கடந்து வியாபிக்கப்பட்டு அரசியல் ரீதியாகப் பல நாடுகளை ஆண்டுவந்தது.
சோழப்பேரரசு வியாபித்திருந்த நாடுகள்
இருப்பினும் 13ம் நூற்றாண்டில் ஏற்பட்ட சோழப்பேரரசின் வீழ்ச்சியின் பின்னர் சோழவம்சத்தில் வந்த மன்னர்கள் தமது ஆட்சிப்பரப்புகளை தொடந்தும் ஆட்சிசெய்து வந்தனர்.குறிப்பாக மலேசியா, இந்தோனேசியாவின் ஸ்ரீ விஜய ராஜ்ஜியம் போன்றவை தமிழ் இளவரசர்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வந்தன. மேலும் இந்த இளவரசர்கள் தமது அயல் நாடுகளையும் கைப்பற்றி தமிழ் - சைவ செல்வாக்குடைய அரசுகளையும் நிறுவினர்.அந்தவகையில் , சுமத்திரா தீவினை ஆண்டுவந்த தமிழ் இளவரசனான "ராஜமுத லூமாய்"என்னும் இளவரசானால் மத்திய பிலிப்பைன்ஸ் தீவுகளை உள்ளடக்கிய பிரதேசம் கைப்பற்றப்பட்டு , கி.பி 1400களில் 'செக்பு மண்டலம்' ( Cebu /Sugbu )என்னும் அரசு நிறுவப்பட்டது.இதன் தலைநகராக "சிங்கபால நகர்" காணப்பட்டது.இந்த நகரம் இன்றைய பிலிப்பைன்சின் Cebu மாவட்டத்தில் அமைந்திருந்தது.
ராஜமுத லூமாயால் கைப்பற்றப்பட்ட விஜயாப் பிராந்தியம்
சோழத் தமிழ் மன்னனான ஸ்ரீ லூமாய் , பிலிப்பைன்ஸில் தமிழ்ச் சைவ ராஜ்ஜியத்தை ஆரம்பித்தல்
ஸ்ரீ லூமாய் மன்னனின் மரணத்தின் பின்னர் அவனது இளைய மகனான ஸ்ரீ பாண்டுக் , சிங்கபால நகரில் மன்னனாக முடி சூடினான்.இந்த சிங்கபால நகரமானது இன்று Mabolo என அறியப்படுகின்றது.இந்த மன்னன் இயற்கை மரணம் எய்தினான்.இவனுக்குப் பின்னுக்கு முடி சூடவேண்டியவனான இவனது சகோதரன் ஸ்ரீ பராங் என்பவன் முடக்குவாதமுற்று இருந்ததால் , இவனுக்குப் பதிலாக ஸ்ரீ பண்டுக்கின் மகனான ஸ்ரீ ஹிமாபோன் அரசனாக முடி சூடினான்.
இவனது ஆட்சியின்போது , சேபு சாம்ராஜ்ஜியத்தில் விவசாயம் மிகுந்த வளர்ச்சியை எட்டியதோடு , ஜப்பான் மற்றும் பர்மா போன்ற நாடுகளிலிருந்து கண்ணாடி, சக்கரை, வாசனைத் திரவியங்கள் மற்றும் தோள்கள் போன்றன இறக்குமதியாகின.சேபுத் துறைமுகமானது சிறந்த வர்த்தகப் பட்டினமாகத் தோற்றம் பெற்றது.
ஸ்பானியரைத் தோற்கடித்த சோழர்
ஸ்ரீ ஹிமாபோன் மன்னனின் காலத்தில், அதாவது 1521ம் ஆண்டில் ஸ்பானிய அரசின் கீழ் பணி புரிந்த Ferdinand Magellan என்னும் நாடுகாண் பயணியின் கீழ் கடற்பிரயாணம் மேற்கொண்ட குழுவொன்று பிலிப்பைன்ஸ் தீவினை வந்தடைந்தது.இவர்கள் ஆரம்பத்தில் Cebu பிராந்தியத்தைக் கைப்பற்றத் திட்டம் தீட்டினர்.இருப்பினும் 1521ம் ஆண்டு, ஏப்ரல் 27ம் திகதி, சோழ மன்னனான ஸ்ரீ ஹுமாபோன் மற்றும் Lapu-Lapu என்னும் பழங்குடி மக்கள் ஒன்றிணைந்த படைக்கும் Ferdinand Magellan தலைமையிலான ஸ்பானியப் படைக்கும் இடையில் நடந்த மேக்டன் போரில் ( Battle of Mactan ) Ferdinand Magellan கொல்லப்படத்தைத் தொடர்ந்து சோழ மன்னனால் ஸ்பானியரின் ஆக்கிரமிப்பு முயற்சி தோக்கடிக்கப்பட்டது.
மேக்டன் போரில் மகலன் கொல்லப்படுதல்
இந்தப் போரில் தோற்ற ஸ்பானிதர்கள், ஸ்ரீ ஹுமாபோன் மன்னனுடன் சமாதான உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டு மீதும் ஸ்பெயின் சென்றனர்.
பிலிப்பைன்ஸில் சோழர் ஆட்சி முடிவுக்கு வருதல் :
ஸ்ரீ ஹுமாபோன் மன்னனின் மரணத்தின் பின்னர் ஸ்ரீ பாராங் மன்னனின் மகனான ஸ்ரீ துப்பஸ் மன்னன் சேபு ராஜாஜியத்தின் மன்னனாக முடி சூடினான். இவனது ஆட்சியின் போது ஸ்பானிய ஆக்கிரமிப்பாளனான Miguel López de Legazpi என்னும் தளபதியினால் கி.பி 1565ல் சோழரின் சேபு சாம்ராஜ்ஜியம் வெற்றிகொள்ளப்பட்டது.சேபுப் போர் ( Battle of Cebu ) என அறியப்படும் இந்தப் போரில் ஸ்ரீ ஹுமாபோன் தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக , சேபு ராஜ்ஜியம் சோழர் கையிலிருந்து ஸ்பானியார் கைக்கு மாறியது.இறுதியில் தமிழ் மன்னனான ஸ்ரீ துப்பஸ் மன்னன் ஸ்பானியர்களிடம் சரணடைந்து, கத்தோலிக்க மதத்தினைத் தழுவி ஞானஸ்நானம் பெற்று தனது பெயரை Felipe Tupas என மாற்றினான்.
சேபு அரசின் அரசர் மற்றும் ராணியைச் சித்தரிக்கும் படம்
சோழப் பேரரசின் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீதான ஆதிக்கம் இவ்வாறாக அங்கு பாரிய அரசியல் மற்றும் கலாச்சாரச் செல்வாக்கினை ஏற்படுத்தியது. இன்றும் பிலிப்பைன்ஸ் மொழியில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம். உதாரணமாக மாங்காய் -Mangga, முருங்கை-malunggaai மற்றும் புட்டு-Puto ஆகிய சில சொற்களை உதாரணமாகக் கொள்ளமுடியும்.
தமிழ் எம் அடையாளம் !!
சாதியாய்ப் பிரிவது நமக்கு அவமானம் !!
--------------------------------------------------------------------
Advertisement
2 Comments:
பெருமை கொள்கிறேன். இருப்பினும் இன்றைய தமிழ் சமூக நிலை வேதனையே தருகிறது
வரலாற்றினை விட தமிழினத்தின் எதிர்காலமே முக்கியமானது. இந்த வரலாறுகளில் இருந்து தமிழர்களாகிய நாங்கள் உலகத்திற்கு நல்லது செய்ய முற்படுவோம்.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home