Sunday, 12 July 2020

இன்றைய காலங்களில் வயதானவர்களை கேலி செய்யும் மனப்பான்மை அதிகரித்து வருகின்றாகின்றதா ?


இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினரால் இதற்க்கு முன் எப்போதும் இல்லாத வகையில் வயதானவர்களை தேவையில்லாத பெரும் சுமை என என்னும் மனநிலை எல்லா நாடுகளிலும் அதிகரித்து வருகின்றது.

பல குடும்பங்களில் வயதானவர்கள் பல தர்மசங்கடமான சூழ்நிலைகளுக்குள் உள்ளாகின்றனர் .இனிமேல் அவர்கள் எமக்கு உதவமாட்டார்கள் .அவர்களிடம் எதுவித உடல் சக்தியும் இல்லை .இவர்களால் எமக்குத்தான் வீண்செலவு அல்லது நம்மால் சுயமாக சொந்த காலில் நிற்கமுடியும் என்ற மனநிலையும் இளம்பருவத்தினரிடம் உருவாகின்றது .

ஆனால் அந்த வயதான முதியவர்கள் தமது பிள்ளைகளை ஒருபோதும்  ஒரு சுமையாக கருதியதில்லை.அவர்கள் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி தமது பிள்ளைகளை இந்தளவு படிக்கவைத்து பெரிய நிலைக்கு உயர்த்தியுள்ளனர்.தாம் உண்ட உணவை விட பிள்ளைகளுக்கே அதிக செலவு செய்து அவர்களது விருப்பங்களை நிவர்த்தி செய்துள்ளனர் .

பிள்ளைகள் பெற்றோருக்கு தாம் இந்த செய்நன்றி கடனை தீர்க்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அடிக்கடி வீட்டினுள் அவர்களை பேசுவதாலேயே மனம் காயப்படும் வகையில் பேசுகின்றனர்.ஒருசிலர் பெற்றோரை தமக்கு சுமை என எண்ணி முதியோர் காப்பகத்தில் சேர்த்து விடுகின்றனர்.

'உழைக்கும் சமயத்தில் தமக்காகவும் ,பிள்ளைகளுக்காகவும் தமது விருப்பங்களை துறந்து ஓடி ஓடி உழைத்த பெற்றோர் தமது இறுதிகாலங்களில் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றுவது தவறா ?"
இதனை இளம்தலைமுறையினர் கட்டாயம் புரிந்துகொள்ளவேண்டும் .

"இந்த கிழவனுக்கு இந்த வயசில ஆசையைப்பார்","இந்த வயசுலயும் பீசா ,பர்கர் கேக்குது இந்தாளுக்கு "என்று அவர்களை திட்டுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.ஒரு சில இடங்களில் இந்த கிண்டல் கேலிகளால் முதியவர்கள்  தற்கொலை செய்த சம்பவங்களும் உண்டு .

நீங்கள் செய்வதை பார்த்து உங்கள் குழந்தைகள் செய்வார்கள் .அது மட்டுமில்லாமல் இறுதிகாலங்களில் அவர்களில் மனதை நோகடிக்காமல் இருங்கள் .பெரியோரின் அனுபவங்களை பெறுங்கள் மற்றும் அவர்களின் ஆசீர்வாதங்களை பெறுங்கள் .

ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் எப்போதும் இளமையாகவே இருக்கப்போவதில்லை .நீங்கள் முதுமை நிலையை அடையும் போது அதன் கஷ்டங்களை அனுபவிப்பீர்கள் ,ஆகவே வயதானவர்களை கேலி,கிண்டல் செய்வதை தவிருங்கள்
ஒன்று மட்டும் நாம் புரிந்து கொள்ளவேண்டும் முதுமையை அடைந்தவுடன் அவர்களின் வாழ்க்கை ஒன்றும் இருளடையப்போவதில்லை,அவர்களுக்கும் பொழுது விடிந்துகொண்டுதான் இருக்கும் .




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home