Tuesday 30 June 2020

இலங்கையை ஆளும் பர்ஸி இன மக்கள் || Parsis in Sri Lanka




1803 இல் முதலாவது பர்சி இனத்தவர் இலங்கை வந்துள்ளார். அவரின்
முழுப் பெயர் Hormusjee Aspandiarjee Khambata. அவரது மூன்று கப்பல்கள்
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்
பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. உலகெங்கிலும் சுமார் இரண்டு
இலட்சம் பர்சி இனத்தவரே உள்ளனர். இதில் அதிகமானோர் இந்தியா
வில் உள்ளனர். இலங்கையில் தற்போது சுமார் 100 பேர் மட்டுமே
உள்ளனர்.

பர்சி இனத்தவர் இந்தியாவிலிருந்து இலங்கை வந்துள்ள போதிலும்
இவர்களது ஆரம்ப காலப் பூர்வீகம் ஈரான் ஆகும். பர்சியன் கடல்
கரையோடு இவர்களது பர்சியன் நாகரிகம் தொடங்குகிறது. ஒரு காலத்தில்
பர்சிய மன்னர் எகிப்திலிருந்து இந்துஸ்நதி வழியாக கிரீஸ் வரை ஆட்சி
புரிந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. கி.பி. 700 இல் பர்சியா ஈரானியர்களால்
முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்குள்ள
அதிக எண்ணிக்கையானோர் முஸ்லிம்களாக மாறியுள்ளனர். அக்கால
கட்டத்தில் எஞ்சியவர்கள் தங்களது சம்பிரதாயங்கள், மதம், மொழி
என்பவற்றைக் காப்பாற்றிக் கொண்டு வாழக் கூடிய இடம் தேடி
இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் கரைசேர்ந்த இடம் இந்தியாவின்
மேற்குக் கரையோர மும்பாய் நகரமாகும். அங்கு அவர்கள் நிரந்தரமாகத்
தங்கிவிட்டனர்.


ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை வாழ் பார்சி மக்கள் 


பர்சியாவிலிருந்து அரசியல் தஞ்சம் கோரி வந்தவர்கள் குஜராத்தின்
'சூரத்'நகரைச் சென்றடைந்துள்ளனர். இந்திய - ஐரோப்பிய வர்த்தகர்
களுக்குத் துணைபுரிகின்ற பணியில் ஈடுபட்டு இரு பிரிவினரதும்
நன்மதிப்பைப் பெற்றுள்ளார்கள். மும்பாய் கிரமமாக வர்த்தகத்தில்
முன்னேற்றம் கண்டதில் பர்சியக்காரர்கள் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளனர். வர்த்தகம், கைத்தொழில், சட்டத்துறை, வைத்தியத்துறை, போன்ற
வற்றில் பர்சியர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள். டாட்டா நிறுவனம் இரு
பர்சி சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனமாகும். இன்றும் இந்த
டாட்டா குடும்பம் பர்சியினரைச் சார்ந்துள்ளது.




பர்ஸி மக்களின் பூர்விக நிலங்கள் 



இலங்கையில் 1603 காலப்பகுதியில் காலி துறைமுகப் பகுதியில்
பர்சியர்கள் வாழ்ந்தமைக்கு அடையாளமாக அங்கே அவர்களது
கல்லறைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எவ்வாறெனினும் 19 ஆம்
நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த போரா, குஜராத்தி, மேமன், சிந்தி,
கோஜா போன்ற சமூகத்தவரின் வருகையுடனேயே பர்சியினரின்
வருகையும் இடம்பெற்றுள்ளதென்பதே சான்றாக உள்ளது.
இலங்கையில் முதலாவது இந்திய சில்லறைச் சாமான்கள் விற்கும்
கடை பரிசியரினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 'டெடி ஹிர்றி' என்பது இதன் பெயராகும். கொழும்பு, புறக் கோட்டை, கொட்டாஞ்சேனை
போன்ற இடங்களில் இவர்களது வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளன.
அரிசி, சீனி, பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தி
யாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளனர். அதே
போன்று லண்டன் உட்பட ஜரோப்பிய நகரங்களுக்கு வாசனைத் திரவியங்களையும் ஏற்றுமதி செய்துள்ளனர்.



பர்ஸிக் குடும்பம் ஒன்று 
(இலங்கை)


1839 இல் இலங்கை வர்த்தக சபை ஆரம்பிக்கப்பட்ட போது
ஆங்கிலேய வர்த்தக உறுப்பினர்களுக்கு மேலதிகமாக இருந்த ஆங்கிலேயர்
அல்லாத உறுப்பினர்கள் இருவருமே பர்சிக்காரர்களாவார். முதலாவதாக
இலங்கைக்கு வந்த கம்பாரா என்பவரும் சாபூர்ஜி ஹிர்ஜி ஆகிய
இருவருமே அங்கத்தவர்களாக இருந்துள்ளனர். வெள்ளவத்தை துணி
ஆலையின் உரிமையாளர் ஈ.எஸ். கெப்டன் என்பவரும் பர்சி இனத்தவரே.
லெஸ்லி கெப்டன் என்பவர் இன்றும் இலங்கையில் மிகவும் பிரசித்தி
பெற்ற தொழில் அதிபராக இருக்கின்றார்.
அபான்ஸ் நிறுவனம் பர்சி சமூகத்தினைச் சார்ந்த திருமதி அகான்
பெஸ்தோன்ஜி என்பவருக்குச் சொந்தமானதாகும். கொழும்பு கண்
ஆஸ்பத்திரியில் முதலாவது விசேட நிபுணராக இருந்த டாக்டர் ஜே.
டடாபோய் பர்சி இனத்தவரே. அதே போன்று கண்டிதர்மராஜ கல்லூரியில்
பில் மொரியா என்பவர் அதிபராகவும் இருந்துள்ளார்.

மஹாகமவில் அமைந்துள்ள புற்று நோய் வைத்தியசாலை பர்சி
இனத்தவரின் கொடையாகும். இலங்கையில் சிரேஷ்ட சட்டத்தரணியும்
ஐ.தே.க. அரசில் அமைச்சராகவும் இருந்த கே. என். சொக்ஷி பர்சி
சமூகத்தைச் சார்ந்தவராவார். இவரது தந்தை என்.கே. சொக்ஷி
இலங்கையில் சட்டத்துறையில் மிகவும் புகழ்பெற்று விளங்கியுள்ளார்.
கே.என். சொக்ஷி ஜனாதிபதி ஆர். பிரேமதாஸாவின் மிக நெருங்கிய
நண்பராக விளங்கியுள்ளார். 1989 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறைக்கமைய தேசியப் பட்டியல் நியமனங்களை
வழங்கும் போது பல்லின சமூகத்தவரினதும் பிரதிநிதித்துவத்துக்காக
இன, சாதி, அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள்..

ஜனாதிபதி சட்டத்தாணியான கே.எஸ். சொக்ஷி பிரசித்தி பெற்ற பல்வேறு
வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்ற நற்பெயரை உடையவர்.
டி.பி.விஜயதுங்கவின் அரசாங்கத்தில் சட்ட நீதி அமைச்சராகவும் ரணில்
விக்கிரமசிங்கவின் அரசில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தவர்.


இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சரான K.S.சோக்ஷீ 


பர்ஸி இனத்தவர் அக்னி தேவனை வழி படுகிறார்கள். 'சாதூஸ்ரா
என்றும் சொரோஸ்திரியன் அல்லது மஸ்தா என்றும் இவர்களது மதத்தைக்
குறிப்பிடுகிறார்கள். கட்டுப்பாடுகள் குறைந்த விதிமுறையினைக்
கடைப்பிடிக்கிறார்கள். இவர்களது மதம் தொடர்பான நூல் Zendavesta
என்று அழைக்கப்படுகிறது.
பிராமண குலத்து இந்துக்கள் பூணூல் அணிவது போல் பர்சி இனத்து
ஆண், பெண் இரு பாலாரும் 12 வயது பூர்த்தியானதன் பின்னர் இடுப்பில்
'சில்க் பட்டு நூல் அணிவது வழக்கமாகும். பர்சியர்கள் பர்சியாவிலிருந்து
இந்தியா வரும் போது கொண்டு வரப்பட்ட ஒரு தீபம் இன்று வரை
மும்பாயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயத்தில் (கி.பி. 700) லிருந்து
அணையா விளக்காக எரிந்து கொண்டு உள்ளது.

பர்ஸிய மதம் 


உணவுக் கட்டுப்பாடு
இல்லாதபோதிலும் இவர்கள் மாட்டிறைச்சி, பன்றியிறைச்சியினை
உண்பதில்லை, காரம், எண்ணெய் குறைவாகவும் காய்கறி, பழ வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது இவர்களது வழக்கமாகும். பர்சி இனத்தவர்
இறந்து போனால் சடலம் கழுகுகளின் தீனாகப் போடப்படும். இந்தப்
பழக்கம் இப்போதும் மும்பாயில் வழக்கத்தில் உள்ளது. இறந்தவரின்
உடல் மீது ஒருவகைத் திரவத்தை பூசி எடுத்துச் சென்று அவர்களுக்கென
ஒதுக்கப்பட்டிருக்கின்ற மயானத்தில் வெட்ட வெளியில் வைத்து
விடுவார்கள், அவை பறவைகளுக்கு இரையாவது நற்செயலாகக்
கருதப்படுகிறது.
இலங்கையிலும் புளுமெண்டல் பகுதியில் இவ்வாறான Tower of
Silence என்ற ஒருவகை மேடை இதற்கென அமைக்கப்பட்டு இருந்துள்ளது.
பிற்காலத்தில் இது கூம்பிகேலே என்ற காட்டுப் பகுதிக்கு மாற்றப்
பட்டுள்ளது. ஆனால் இப்போது இலங்கையில் உள்ள குறைந்த
எண்ணிக்கையான மக்கள் மத்தியில் இந்தப் பழக்கம் நடைமுறையில்
இல்லை. தற்போது இங்கு இறக்கின்றவர்களை வெள்ளைத் துணியால்
சுற்றி கொழும்பு ஜாவத்தையில் உள்ள மயானத்தில் புதைத்து விடுகிறார்கள்.


இலக்கை வாழ் பர்ஸி மதகுரு மற்றும் இரு சகோதரர்கள் 


வேறு இனத்தவர்கள், சமயத்தவர் போல் மதம் மாறுவதால்
ஒருவர் பர்சி இனத்தில் இணைந்து விட முடியாது. கட்டாயமாக அம்மா,
அப்பா வழியில் வருபவர்கள் மட்டுமே பர்சி இனத்தவராக அங்கீகரிக்
கப்படுவர். இந்த இனம் பெருகாமல் இருப்பதற்கும் அருகி வருவதற்கும்
இதுவே பிரதான காரணியாகும். இந்தியப் பிரதமர் நேருவின் மகள்
இந்திரா காந்தி 1936 இல் திருமணம் செய்து கொண்டது பர்சிக்காரரான
பெரோஸ் காந்தி என்பரை. அதனாலேயே நேரு குடும்பம் இந்திரா
காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி வரை காந்தி
பரம்பரையான பெயரினைக் கொண்டு விளங்குகின்றார்கள்
குறிப்பிடத்தக்கது.


Friday 26 June 2020

இலங்கையில் குஜராத்தியர் || Gujaratis in Sri Lanka


1808 ஆம் ஆண்டளவில் குஜராத்தியர்கள் இலங்கை வந்துள்ளனர். 1905
இல் மோஹன்லால் மற்றும் நந்தலால் ஆகியோர் அரிசி வர்த்தகத்தில்
இருந்துள்ளனர். அதே போன்று பால் உற்பத்தித்துறை மற்றும் பால்
குஜராத்தியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பம்பாய் தலைமைச்
செயலகத்தின் ஒரு கிளையான Nation Dairy கம்பனி குஜராத்தியர்
களினால் கொழும்பில் நிர்வகிக்கப்பட்டது. இக்கம்பனி மூலம் பட்டர்
மற்றும் ஏனைய பால் உற்பத்திப் பொருட்களை விநியோகம் செய்து
வந்தனர். இதில் அங்கத்துவம் வகித்த பங்குதாரர்களில் PV. டல்வி
(P.V.Dalvi) இக் கம்பனியை நிர்வகித்து வந்துள்ளனர்.



Metropolitan நிறுவனம் அம்பானி சகோதரர்களால் நடாத்தப்பட்டு வருகிறது.



1922 ஆம் ஆண்டு உதேஷி என்பவர் வெள்ளவத்தை துணி ஆலையின்
டையிங் (கலர் பூச்சு) மாஸ்டராகப் பணியாற்றியுள்ளார்.
1930 இல் உதேசி தன்னுடைய சொந்த முயற்சியால் உயர்ந்து
'டெசிகேட்' என்ற ஒரு வகையான பூச்சு வகையினை ஜெர்மனிக்கு
ஏற்றுமதி செய்து அங்கிருந்து மாற்றீடாக பண்ட மாற்றம் முறையில்
வானொலிப் பெட்டிகளை இறக்குமதி செய்து இலங்கையில் சீடில்ஸ்'
நிறுவனத்துடன் இணைந்து முக்கிய பங்களிப்புச் செய்துள்ளார்.
பின்னாளில் இதே கம்பெனியினை விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
Siedles கம்பெனி இரண்டாம் உலக மகா யுத்த காலத்தின் பின்னர்
ஜப்பானிலிருந்து பல்வேறு வகையான மின் உபகரணங்களைத் தருவிப்பதில் முன்னணி வகித்து வருகின்றது.




கொழும்புப் பொரளையில் இயங்கிவரும் Siedles நிறுவனம் தற்போது Morarji Udeshi மற்றும் Gowshik Udeshi ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது.



இலங்கை மக்களின் வாழ்க்கை பொருளாதார நிலைமைகளுக்கு
ஏற்றதான வானொலிக் கருவிகளை விற்பனை செய்ததன் மூலம் மக்கள்
மத்தியில் இக்கம்பனி மிகவும் வரவேற்பினைப் பெற்றிருந்தது.
வாஹினி எனும் ரேடியோ அப்போது நூறு ரூபாவிற்கும் குறைந்த
விலையிலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜாமின்தாஸ் அம்பாணி
ஒரு கணக்காளராவர். இவர் 1934 இல் இலங்கை வந்துள்ளார். 1958 ஆம்
ஆண்டு மெட்ரோபொலிடன் கம்பெனியினை ஆரம்பித்துள்ளார். அரச
மற்றும் தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான காரியாலய உபகரணங்
களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் இவரது கம்பெனி
அங்கமாகும்.
குஜராத்தி மக்கள் கிருஷ்ண பகவானை வழிபடுகிறார்கள். இவர்களது
தாய் மொழி குஜராத்தி, கொழும்பு கொட்டாஞ்சேனையில் ராதா
கிருஷ்ணா கோவில் உள்ளது. 1940 இல் கட்டப்பட்டுள்ள இந்த குஜராத்தியர்கள் அதிகமாகக் கூடி விழா எடுப்பது வழக்கம். ஆரம்பக்கால
குஜராத்தியர்கள் இலங்கைக்கு வந்தபோது போரா' இனத்தவரின்
வர்த்தக உதவியாக கணக்காளர்களாகவும், மேலாளர்களாவுமே வந்துள்ளனர். போரா, குஜராத்தி ஆகிய இரு சமூகத்தவர்களதும் பூர்வீக மண்
ஒன்றாகும். எனவே இந்த இரு சமூகத்தவர்களும் ஒரே காலகட்டத்தில்
இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இலங்கையில் குஜராத்தியினர் சனத்தொகை 500க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளது.



Thursday 25 June 2020

திரையுலக பிரபலம் பறவை முனியம்மாவின் பிறந்தநாள் இன்று


தமிழ்த் திரைப்படங்களில் தூள் எனும் படத்தில் திரைப்படப் பாடகியாகவும், நடிகையாகவும் அறிமுகமானார்.காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன் என இருபத்தைந்து திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார்.இவர்  (25.06.1943) அன்று பிறந்தார்.

இவரது கலைச் சேவையைப் பாராட்டி, தமிழக அரசு, இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கியுள்ளது.


பறவை முனியம்மா தமிழ்த் திரைப்பட, நாட்டுப்புறப் பாடகி, மற்றும் நடிகையாவார். மதுரை மாவட்டத்திலுள்ள பரவை எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பரவை முனியம்மா என்று அழைக்கப் பெற்றார். தமிழ்த் திரைப்படங்களில் தூள் எனும் படத்தில் திரைப்படப் பாடகராகவும், நடிகராகவும் அறிமுகமானார்.

தூள் படத்தில் இடம்பெறும் 'சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி' என்ற பாடல் இவரை தமிழகம் முழுவதும் அடையாளம் காட்டியது. இந்த பாடத்திற்கு பின்னர் ஒரு குணச்சித்திர நடிகையாகவும், பிரபல நாட்டுப்புற பாடகியாகவும் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார்.



பரவை முனியம்மா, மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்ற ஊரை சேர்ந்தவர், இவர் ஏராளமான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் பாடியவர். சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். தமிழக அரசின் 'கலைமாமணி விருது' உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயனின் 'மான் கராத்தே' படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

திரைப்படங்கள்

  1.     தூள் (2003)                                            
  2.  காதல் சடுகுடு (2003)                           
  3.   உன்னை சரணடைந்தேன் (2003)
  4.  ஏய் (2004)
  5.  ஜெய்சூர்யா (2004)
  6.  என் புருசன் எதிர்வீட்டுப் பொண்ணு (2004)
  7.  கோவில் (2004)
  8.  சூப்பர் டா (2004)
  9.  தேவதையைக் கண்டேன் (2005)
  10. கண்ணாடிப் பூக்கள் (2005)
  11.   மான் கராத்தே (2014)



பரவை முனியம்மா உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு அவர் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 29. 03. 2020 அதிகாலை 2.30 மணிக்கு காலமானார்



Tuesday 23 June 2020

கவிஞர் கண்ணதாசனின் வரலாறு || தமிழ்த் திரையுலகதில் மறக்கப்படமுடியாத பாடலாசிரியர்







கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.


 வாழ்க்கைக் குறிப்பு


கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.  தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.


குடும்பம்








கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மா (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாள்களிலேயே பார்வதிஎன்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும். ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் பிறந்தன. ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் பிறந்தார்.






இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும்,பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.


அரசியல் ஈடுபாடு





கருணாநிதியுடன் கண்ணதாசன் 



அண்ணாவின் திராவிட
கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

மறைவு

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.




காமராஜருடன் கண்ணதாசன் 


மணிமண்டபம்

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[7]அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.


படைப்புகள்

·         இயேசு காவியம்
·         அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
·         திரைப்படப் பாடல்கள்
·         மாங்கனி
கவிதை நூல்கள்
·         பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
·         கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில் பாடிக்கொடுத்த மங்களங்கள் கவிதாஞ்சலி  தாய்ப்பாவை ஸ்ரீகிருஷ்ண கவசம்
·         சுருதி சேராத ராகங்கள்
·         முற்றுப்பெறாத காவியங்கள்
·         பஜகோவிந்தம்
·         கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்

புதினங்கள்

·         அவளுக்காக ஒரு பாடல்
·         அவள் ஒரு இந்துப் பெண்
·         சிவப்புக்கல் மூக்குத்தி
·         ரத்த புஷ்பங்கள்
·         சுவர்ணா சரஸ்வதி
·         நடந்த கதை
·         மிசா
·         சுருதி சேராத ராகங்கள்
·         முப்பது நாளும் பவுர்ணமி
·         அரங்கமும் அந்தரங்கமும்
·         ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
·         தெய்வத் திருமணங்கள்
·         ஆயிரங்கால் மண்டபம்
·         காதல் கொண்ட தென்னாடு
·         அதைவிட ரகசியம்
·         ஒரு கவிஞனின் கதை
·         சிங்காரி பார்த்த சென்னை
·         வேலங்காட்டியூர் விழா
·         விளக்கு மட்டுமா சிவப்பு
·         வனவாசம்
·         பிருந்தாவனம்

வாழ்க்கைச்சரிதம்

·         எனது வசந்த காலங்கள்
·         வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)

·         எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)

·         மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
கட்டுரைகள்
·         கடைசிப்பக்கம்
·         போய் வருகிறேன்
·         அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
·         நான் பார்த்த அரசியல்
·         எண்ணங்கள்
·         வாழ்க்கை என்னும் சோலையிலே
·         குடும்பசுகம்
·         ஞானாம்பிகா
·         ராகமாலிகா
·         இலக்கியத்தில் காதல்
·         தோட்டத்து மலர்கள்
·         இலக்கிய யுத்தங்கள்

நாடகங்கள்

·         அனார்கலி
·         சிவகங்கைச்சீமை
·         ராஜ தண்டனை
இவை தவிர கவிஞர் கண்ணதாசன் பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளார், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.
விருதுகள்
·         சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)

Monday 22 June 2020

உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட தமிழகச் சிறுமி











உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலி  தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்.அதுவும் 24 மணி நேரத்தில்.

தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர்.

இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான்.

அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான IT Professional களுக்கு 1/2 மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.தன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி, ஓர் இந்தியர்.

அதுவும் தமிழர். ஆம்! உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது

HCL நிறுவனம் The Pride of India – Visalini என பாராட்டிய போது அவருக்கு வயது 11.

TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதில், The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார்.

London, World Records University, Dean தாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார் விசாலினி.









Times Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2 நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian – Visalini என அரை மணி நேர Documentry படத்தை ஒளிபரப்பியது. நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான SBS ஆஸ்திரேலியா.

உலகின் 74 மொழிகளில் 174 நாடுகளில் விசாலினியின் அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பி கௌரவப் படுத்திய போது விசாலினிக்கு வயது 13 தான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விசாலினியின் தந்தைக்கு வந்தது
ஒரு தொலைபேசி அழைப்பு … எமது நாட்டு கௌரவ பிரதமர் உங்களது மகளை சந்திக்க விரும்புகிறார் என்று.

பிரதமரைக் கண்ட விசாலினி, எழுந்து நின்று தமிழில் வணக்கம் என்று சொல்ல, பதிலுக்கு தமிழிலேயே வணக்கம்.என்றார் பிரதமர் மோடி.

விசாலினியுடன் உரையாடிய போது, இந்தச் சிறுவயதில் நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான் என்று நெகிழ்ந்து பாராட்டினார்.







திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனோ, விசாலினி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்காற்றுவார் என்று பெருமை பொங்க வாழ்த்தினார்.

உலக அளவில் பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு, தான் இன்னும் தமிழக முதல்வரின் பாராட்டைப் பெற வில்லையே என்பது மிகப்பெரிய ஆதங்கம்.

உங்களுக்குத் தெரியுமா, சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கணினி ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160. ஆனால் விசாலினியின் IQ level 225.











உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.

உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஓர் எலக்ட்ரீசியன். தாத்தாவோ வெல்டராக இருந்து, பின் தமிழாசிரியராக ஆனவர்.

இந்தத் தமிழ்மகள் பெருமையை தரணி எங்கும் பறைசாற்றுங்கள்.

Friday 19 June 2020

இலங்கையில் தெலுங்கு மக்கள்

இலங்கையில் தெலுங்கு மக்கள் ஆரம்ப காலத்திலிருந்தே பல பகுதிகளிலும் வாழ்ந்து வந்துள்ளனர். விஜயநகரத்து சாம்ராஜ்ஜியத்தின் செல்வாக்கினால் இலங்கையிலும் செல்வாக்குப் பெற்று விளங்கியுள்ளனர். 1707 தொடக்கம் 1815க்கும் இடையில் நரேந்திர
சிங்கன்,  ஸ்ரீ விஜயராஜசிங்கன், கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன், இலங்கையை ஆண்ட கடைசி மன்னனான ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் போன்ற மன்னர்கள் ஆந்திரா பெண்களை வரவழைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மன்னன் விஜயமானன்நாயக்கரின் இரண்டு புதல்வியரை கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் மணந்துள்ளார்.




பாம்பாட்டும் தெலுங்குக் குறவர்கள் 1900களில் 


 1803 ஆம் ஆண்டு கவர்னர் பிரெடரிக் நோர்த் அவர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தென்னிந்தியர்களின் அருந்ததியர் சமூகத்தினரும் அடங்குவர். ஆரம்பகாலகட்டங்களில் தெலுங்கர்களும் மலைநாட்டின் பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். கொங்குநாட்டுப் பகுதிகளில் இருந்து வந்த சிலர் மலையக நகரங்களில் வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு பிரதான வீதியில் ரஞ்சனாஸ்,  கணேஷ் துணியகம் போன்ற பல நிறுவனங்கள் மிக வெற்றிகரமாக இப்போதும் இயங்கி வருகின்றன.



தெலுங்குக் குடும்பம் ஒன்று 




துறைமுகம்,  ரயில்வே,  நகர சுத்திகரிப்பு தொழில்,  சீவல்த் தொழில், மட்பாண்டத் தொழில், தையல் தொழில், சவரத் தொழில்,  சலவைத் தொழில்,  வீட்டுவேலை முதலிய தொழில்களில் இவர்கள் ஈடுபட்டு வந்தார்கள். ஆயிரக்கணக்கானோர் தொழில்களில் இன்றும் ஈடுபட்டு வருகின்றார்கள். இப்பிரிவினரை தோட்டம் சாராத வகுப்பிற்குள் அடக்க முடியும். 1922ஆம் ஆண்டு தெலுங்கர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சம் ஆகும்.



சவரத்தொழில் செய்யும் இலங்கை வாழ் தெலுங்கு வயோதிபர்



 இலங்கையின் பிரதான நகரங்களில் நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களாக சேவைகளில் ஈடுபடும் அருந்ததியர் என்னும் சமூகத்தினர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்களுடைய மரபும் கலாச்சார பண்பாட்டு வரலாறும் தென்னிந்தியத் தமிழர்கள் போன்ற தோற்றத்தையுடையதாக இருந்தபோதிலும் இவர்களது தாய்மொழி தெலுங்கு ஆகும். இப்போது ஆந்திராவில் பேசப்படுகின்ற தெலுங்கு மொழியை விட ஒருவகை வட்டாரப் பேச்சு வடிவமாகவும் இருந்துள்ளது இந்த மக்கள் பெரும்பாலும் இன்று தமிழ் மொழியிலேயே பேசுகின்றார்கள். இருப்பினும் மற்றவர்களுக்குப் புரியாதவாறு தமக்குள் சிலவேளைகளில் தெலுங்கு மொழியில் பேசுவார்கள்.






தெலுங்குக் குடும்பம் ஒன்று 







 அருந்ததியர்களில் தெலுங்கு பேசுபவர்கள், கன்னடம் பேசுபவர்கள் என இரண்டு பிரிவினர் உள்ளனர். மற்றையவர்கள் ஏனைய மொழி பேசும் மக்களோடு கலந்து உள்ளனர். போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் முதலாவதாக தெலுங்கு பேசுபவர்கள் வந்துள்ளார்கள். ஆந்திராவின் பல பகுதிகளிலிருந்தும் பல காலகட்டங்களில் பல காரணங்களுக்காக தெலுங்கர்கள் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து பின்னர் சிறு சிறு குழுக்களாக இலங்கை வந்துள்ளனர்.




இலங்கை வாழ் தெலுங்கு சமூகம் 




1220 தொடக்கம் 1238 வேளையில் பல்லவர்களையும் பாண்டியர்களையும் வெற்றி கொண்ட இரண்டாம் நரசிம்மன் காலத்திலும் , 1254 தொடக்கம் 1295 வரையான கன்னட மன்னன் ராமநாதன் காலத்திலும் கன்னடம் பேசும் அருந்ததியர்கள் தமிழகம் வந்துள்ளனர்.முகமதியர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்த போது ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆட்சி காலங்களில் பெருமளவு அருந்ததியர்கள் தமிழகத்தில் குடியேறி உள்ளனர். ஜோதிடம் மாந்திரீகம் அதிக நம்பிக்கை உள்ள இனமாகவும் அதிக தெய்வ நம்பிக்கை கொண்ட இனமாகவும் இவர்கள் உள்ளனர். தவில், நாதஸ்வரம், உறுமி,  பாம்பு ஆட்டுதல் போன்ற கலைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.





இன்றும் இவர்கள் சைவ மதத்தினையே பரவலாகப் பின்பற்றுகிறார்கள் 




 தெலுங்கு காங்கிரஸ், அகில இலங்கை தெலுங்குக் காங்கிரஸ் என்ற அமைப்புகள் மூலமாக பன்னீர்செல்வம்,  அன்பழகன் போன்றவர்கள் இந்த மக்களை ஒன்றிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

 சிங்களவர்கள் சிங்களத்தில் பேசும்போது மொழியில் புரியாத நிலைமை தோன்றும்போது நகைச்சுவையாக அன்டர தெமழ  என்பார்கள். இது ஆந்திர தமிழாகும். குருநாகல் மாகந்துர பெண்நிலை குளியாப்பிட்டி போன்ற பகுதிகளில் தெலுங்கு மக்கள் சில கிராமங்களில் சிங்கள மக்களோடு கலந்து சிங்கள சமூகமாக மாறி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





பாம்பாட்டி  ஒருவர் 




 பிரேமதாசா அவர்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதிகளில் தெலுங்கு மக்களின் நல உரிமைகளை முன்னெடுக்க கபினட் அமைச்சர் ஒருவர் பொறுப்பாக்கப்பட்டிருந்தார். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் டிரோன் பெர்னாண்டோவும் ஒருவராவார்.

 தெலுங்கு காங்கிரஸ் தலைவர் அன்பழகன் வருடம் தோறும் தமிழ்நாடக விழாவினை நடத்தி தொண்டாற்றினார். ஸ்தல ஸ்தாபன ஊழியர்கள் இலங்கை குடியுரிமை பெற்ற பின்னர் நகரசபை மற்றும் மாநகரசபை உறுப்பினர் ஆகினர். பின்னர் இவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்துவிட்டனர். காலம் சென்றவர்களான ஊர்காவலன், பொல்காவலை முனியாண்டி ஆகியோர் கலை இலக்கிய ஈடுபாடு உடையவர்கள். முற்போக்கு சிந்தனை உடையவர்கள் ஆவர்.

Monday 15 June 2020

பண்டைய தமிழ் எழுத்து வடிவங்கள் || வாருங்கள் கற்போம்



தமிழி எழுத்து (காலம் : கி.மு. 5ம் நூற்றாண்டு  முதல் கி.பி. 3ம் நூற்றாண்டு) 

தமிழ் வட்டெழுத்து (காலம்: கி.பி 3ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு) 

தமிழ் எழுத்து(இன்றைய தமிழ் எழுத்து)